உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கூலி தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை

கூலி தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை

பாகூர்; கிருமாம்பாக்கம் தண்ணீர் தொட்டி வீதியைச் சேர்ந்தவர் பக்கிரி 61; இவர் மாட்டு வண்டி வைத்து கூலி வேலை செய்து வந்தார். சரியாக வேலை கிடைக்காததால் மாட்டு வண்டியை விற்பனை செய்து விட்டு வீட்டிலேயே இருந்து வந்தார்.இவருக்கு இரண்டு கால் பாதிக்கப்பட்டதால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடக்க முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால், மனமுடைந்து காணப்பட்ட அவர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவலறிந்த கிருமாம்பாக்கம் போலீசார் பக்கிரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது மனைவி அஞ்சாலாட்சி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி