உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாய்க்காலில் விழுந்த தொழிலாளி இறப்பு

வாய்க்காலில் விழுந்த தொழிலாளி இறப்பு

புதுச்சேரி: பாகூர் அருகே பாசன வாய்க்காலில் விழுந்து கிடந்த தொழிலாளி, சிகிச்சை பலனின்றி இறந்தார். . பாகூர் அடுத்துள்ள மேல்பரிக்கல்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி 62; கூலி தொழிலாளி. இவர் கடந்த 9ம் தேதி மாலை பரிக்கல்பட்டில் உள்ள பாசன வாய்க்காலில், மதுபோதையில் விழுந்து கிடந்துள்ளார். அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு, புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று (நவ.,15) அவர் இறந்தார். புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !