மேலும் செய்திகள்
செவிலியர் கல்லுாரியில் விளக்கேற்றும் விழா
10-Feb-2026
புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் செவிலியர் கல்லுாரியில், முதலாம் ஆண்டு செவிலிய மாணவர்களுக்கான விளக்கேற்றி உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் கல்லுாரி முதல்வர் (பொ) குமாரி வரவேற்றார். ஜிப்மர் கல்வித் துறைத் தலைவர் விக்ரம் காட்டே தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சண்டிகர் தேசிய செவிலியர் கல்வி நிறுவனம், முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதல்வர் சுக்ஹப்பால் கவுர் சிறப்புரையாற்றினர். ஜிப்மர் ஆராய்ச்சி துறைத் தலைவர் காதம்பரி, துணை இயக்குநர் நிர்வாகம் (பொ) பிரேமராஜன் பாராட்டி பேசினார். செவிலியர் கல்லுாரி உதவி பேராசிரியர் வெற்றிச்செல்வி ஆண்டறிக்கை வாசித்தார். உதவி பேராசிரியர் லட்சுமி ராமமூர்த்தி விளக்கேற்றும் விழாவின் சிறப்பம்சம் குறித்து பேசினார். தொடர்ந்து, சிறப்பு விருந்தினர் மற்றும் செவிலிய துறைத் அதிகாரிகள் முதலாம் ஆண்டு மாணவ மாணவியர்களுக்கு தீபம் ஏற்றி வைத்தனர். செவிலியப் பிரிவு பொறுப்பாளர் புஷ்பலதா 'பிளாரன்ஸ் நைட்டிங்கேல்' உறுதிமொழியைக் கூற, அதனை தொடர்ந்து வாசித்து செவிலிய மாணவ மாணவியர்கள் உறுதிமொழி ஏற்றனர். ஆசிரியர் ஜனார்த்தனன் தொகுப்புரையாற்றினார். உதவி பேராசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.
10-Feb-2026