இடத்தகராறு: இரு தரப்பினர் மீது வழக்கு
அரியாங்குப்பம்,; இடப்பிரச்னை தொடர்பாக ஏற்பட்ட தகராறில், இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் வெங்கடகிருஷ்ணன், 58. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த குமரவேல், 55, என்பவருக்கும் இடையே, இடப் பிரச்னை இருந்து வருகிறது. இது தொடர்பாக, கோர்ட்டில், வழக்கு நடந்து வருகிறது.இந்நிலையில், வெங்கடகிருஷ்ணன் அவரது சகோதரர் மனோகர் ஆகியோர் அந்த இடத்தில் வேலி அடைக்க சென்றனர். தகவலறிந்த, குமரவேல், அவரது டிரைவர் மனோகர் ஆகியோர் அங்கு சென்று எப்படி வேலி அடைக்கலாம் என, கேட்டனர். இதில், இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.இதுகுறித்து, இரு தரப்பினரும் தனித் தனியே கொடுத்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.