உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இறுதி வாய்ப்பு

 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இறுதி வாய்ப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் வாக்காளர் இறுதி பட்டியலில் விடுபட்டவர்கள் வரும் 15ம் தேதிக்குள் சேர்த்துக் கொள்ள தேர்தல் துறை தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் வரைவு வாக்காளார் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதில் புதுச்சேரியில் எஸ்.ஐ.ஆர்., பணிகளுக்கு பின், 1 லட்சத்து 3 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி, மாகி, ஏனாம் பகுதிகளில் 85 ஆயிரத்து 531 வாக்காளர்களும், காரைக்காலில் 17 ஆயிரத்து 936 வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலில் 9 லட்சத்து 18 ஆயிரத்து வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் தகுதி வாய்ந்த வாக்காளர்கள் பட்டியலில் மீண்டும் சேர்க்கும் வகையில் படிவம் 6 மற்றும் 6ஏ பயன்படுத்தி இறுதி வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்க்க முடியும். இதற்கு, அடுத்த மாதம் (ஜனவரி) 15ம் தேதி கடைசி நாளாகும். இதேபோல், புதுச்சேரியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின், படிவம் 6 மற்றும் 6ஏ மூலம் வாக்காளர் பட்டியலில் சேர்க்கக் கோரி 447 விண்ணப்பங்களும், நீக்கக் கோரி 8 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன. இத்தகவலை புதுச்சேரி மாநில தேர்தல் துறை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி