உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முன்னாள் கவர்னர் கிரண்பேடி எழுதிய அச்சமற்ற ஆட்சி நுால் வெளியீட்டு விழா

முன்னாள் கவர்னர் கிரண்பேடி எழுதிய அச்சமற்ற ஆட்சி நுால் வெளியீட்டு விழா

புதுச்சேரி : புதுச்சேரி முன்னாள் கவர்னர் கிரண்பேடி எழுதிய அச்சமற்ற ஆட்சி என்ற பிரெஞ்சு நுால் வெளியீட்டு விழா நடந்தது.பெரியக்காலாப்பட்டு ஸ்டடி லெகோல் இன்டர்நேஷனல் பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு பள்ளி நிறுவனர் செரியன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சஞ்சய் செரியன் வரவேற்றார்.நுாலின் முதல் பிரதியை புதுச்சேரி பல்கலைக் கழக துணை வேந்தர் தரணிக்கரசு வெளியிட, புதுச்சேரி, சென்னை பிரெஞ்சு துாதரக ஜென்ரல் எட்டியேன் ரோலன்ட் பியேக் பெற்றுக்கொண்டார். விழாவில் இந்தியா விஷன் அறக்கட்டளை, டாக்டர் செரியன் எஜூகேஷனல் சொசைட்டி சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. முன்னாள் கவர்னர் கிரண்பேடி ஏற்புரையாற்றினார்.விழாவில் மாணவர்களுக்கு ஜெனரல் பிரபியன்சி விருது வழங்கப்பட்டது. இதேபோல் பல் வேறு விளையாட்டுகளில் சாதித்த மாணவர்களுக்கு விருது, பதக்கங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சந்தியா செரியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை