உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழக பகுதி ஓசூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கண்ணன் தாக்கப்பட்டதை கண்டித்து, புதுச்சேரி வழக்கறிஞர்கள் நேற்று கோர்ட் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.கோர்ட் வளாகத்தில் திரண்ட வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தினர். வழக்கறிஞர் சங்க தலைவர் ரமேஷ், துணை தலைவர் இந்துமதி செயலாளர் நாராயணகுமார், பொருளாளர் ராஜபிரகாஷ், வழக்கறிஞர்கள் கண்ணன், ஸ்ரீதர்பாபு, சுரேஷ், லோகநாதன், பெருமாள், கலியமூர்த்தி, கோவிந்தராஜ், ராஜசேகர், சிவராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி