உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பள்ளியில் கற்றல் திருவிழா

அரசு பள்ளியில் கற்றல் திருவிழா

புதுச்சேரி: சேதராப்பட்டு, சர்தார் வல்லபாய் படேல் அரசு தொடக்கப் பள்ளியில் கற்றல் திருவிழா நடந்தது. பள்ளித் துணை ஆய்வாளர் புவியரசன் தலைமை தாங்கினார். ஊசுடு தொகுதி எம்.எல்.ஏ., கார்த்திகேயன் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார். தலைமை ஆசிரியர் ஹேமமாலினி வரவேற்றார். தொடர்ந்து, மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர் பங்கேற்றனர். ஆசிரியர் சரிதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை