உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி பல்கலையில் சொற்பொழிவு

புதுச்சேரி பல்கலையில் சொற்பொழிவு

புதுச்சேரி; புதுச்சேரி பல்கலைக்கழகம் சுப்ரமணிய பாரதியார் தமிழியல் புலத்தில் பாவலர் மணி சித்தன் நிறுவிய முதலியாண்டான் அறக்கட்டளை சொற்பொழிவு, தமிழியற்புலம் கருத்தரங்கம் கூடத்தில் நடந்தது.தமிழ்த்துறைத் தலைவர் கருணாநிதி வரவேற்றார். அறக்கட்டளை நிறுவனர் ஆளவந்தார் சித்தன் அறக்கட்டளை குறித்தும், சித்தன் படைப்புகள் குறித்தும் நோக்கவுரையாற்றினர். முனைவர் செங்கமலத்தயார் வாழ்த்துரை வழங்கினார். வழக்கறிஞர் கோவிந்தராசு தலைமை உரையாற்றினார்.பேராசிரியர் ஈஸ்வரன் 'சரணல்லால் சரணில்லை' என்ற பொருள் குறித்து சிறப்புரையாற்றினார். விழாவில் கல்வெட்டு அறிஞர் வெங்கடேசன், தமிழ்த் தறை பேராசிரியர்கள் பழனிவேலு, தனலட்சுமி, ரவிச்சந்திரன் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். பேராசிரியர் ரவிக்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை