உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தொழுநோய் விழிப்புணர்வு

தொழுநோய் விழிப்புணர்வு

புதுச்சேரி; புதுச்சேரி நலவழித்துறை, தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் மற்றும் கோரிமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.இந்திரா நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளியின் பொறுப்பு ஆசிரியை ஜெஸ்ஸி வரவேற்றார். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவஅதிகாரி சித்ரா, பள்ளியின் துணை முதல்வர் சந்திரன் முன்னிலை வகித்தனர்.பெண் சுகாதார மேற்பார்வையாளர் வாசுகி, தொழுநோய் குறித்து விளக்கம் அளித்தார். சுகாதார உதவியாளர் சிவக்குமார் தொழுநோய் பரவும் விதம், கண்டறியும் முறை, சிகிச்சைகள் குறித்து பேசினார்.சுகாதார உதவியாளர் ஜெகநாதன் 'தொழுநோய் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாணவர்களின் பங்கு குறித்து பேசினார். தொடர்ந்து, மாணவர்கள் தொழுநோய் உறுதிமொழி ஏற்றனர். செவிலியர் தனலட்சுமி நன்றி கூறினார்.ஏற்பாடுகளை ஆஷா ஊழியர் விருதாம்பாள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ