உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  நுாலக பணியிடங்கள் ரிசல்ட் வெளியீடு

 நுாலக பணியிடங்கள் ரிசல்ட் வெளியீடு

புதுச்சேரி: புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டு துறையின் 26 இளநிலை நுாலக உதவியாளர், 1 கேலரி அசிஸ்டண்ட் பணியிடங்களுக்கு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு மே 31ம் தேதி நடந்த நிலையில், அதன் முடிவுகளை நிர்வாக சீர்த்திருத்த துறையின் தேர்வு பிரிவு வெளியிட்டுள்ளது. மொத்தம், 99 மதிப்பெண்களுக்கு விடைத்தாள்கள் திருத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.இளநிலை நுாலக உதவியாளர் பணிக்கான போட்டி தேர்வில் புவனேஸ், கிரிதரன் ஆகியோர் 96.75 மதிப்பெண்ணுடன் பொது பிரிவில் முதலிடம் பிடித்துள்ளனர். கேலரி அசிஸ்டண்ட் பணிக்கு பிரவீன்குமார் 94 மதிப்பெண்ணுடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி