உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  எல்.ஐ.சி., அதிகாரி மர்ம சாவு

 எல்.ஐ.சி., அதிகாரி மர்ம சாவு

அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் மாஞ்சாலை, அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் கணேஷ்குமார், 39; புதுச்சேரி எல்.ஐ.சி., வளர்ச்சி அதிகாரி. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 15 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வசித்து வந்தார். கடந்த மூன்று நாட்களாக பணிக்கு செல்லாமல் இருந்ததால், அவருடன் பணி செய்த ஒருவர் சந்தேகத்தின் பேரில், அவரை பார்க்க நேற்று வீட்டிற்கு சென்றார். வீட்டு கதவு உள் பக்கமாக தாழ் போடப்பட்டிருந்தது. கதவை திறந்து பார்த்த போது, அவர் உள்ளே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அருகில், மது பாட்டில்கள் கிடந்தது. புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை