உள்ளூர் செய்திகள்

மதுபான கடை சூறை

புதுச்சேரி : புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த வாலிபர்கள் மதுபான கடையை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.சேலத்தில் இருந்து புதுச்சேரிக்கு 20க்கும் மேற்பட்ட வாலிபர்கள் நேற்று முன்தினம் சுற்றுலா வந்தனர். அவர்கள் நோணாங்குப்பத்தில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கி, புதுச்சேரியை சுற்றி பார்த்தனர்.புதுச்சேரியில் இருந்து சேலத்திற்கு ஒரு வேனில் நேற்று இரவு புறப்பட்டனர். அவர்கள், முதலியார்பேட்டை நுாறடி சாலையில் உள்ள தனியார் மதுபான கடையில் மது வாங்கினர். அப்போது சிலர் பீர் வாங்கி அங்கேயே குடித்தனர். இதனை பார் ஊழியர்கள் கண்டித்ததால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த வாலிபர்கள் கடை ஊழியர்களை பீர் பாட்டிலால் சரமாரியாக தாக்கி, மதுபான கடையை உடைத்து சேதப்படுத்தினர்.பார் ஊழியர் ராஜசேகர் படுகாயமடைந்தார். தகவலறிந்த முதலியார்பேட்டை போலீசார் விரைந்து வந்து, ரகளையில் ஈடுபட்ட வாலிபர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !