உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  புதுச்சேரி கவிஞருக்கு இலக்கிய பொழில் விருது

 புதுச்சேரி கவிஞருக்கு இலக்கிய பொழில் விருது

புதுச்சேரி: பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில், புதுச்சேரி கவிஞர் சரவணுக்கு இலக்கிய பொழில் விருது வழங்கி கவுரவித்தது. கோயபுத்துார் பாரதியார் பல்கலைக்கழம் தமிழ்த்துறை மற்றும் புதுச்சேரி யோகி பதிப்பகம் இணைந்து, பாரதியார் பல்கலைக்கழகத்தில், பாரதி பற்றாளர் மாநாடு நடந்தது. இதில், இலக்கிய பணியினை பாராட்டி, புதுச்சேரி கவிஞர் சரவணனுக்கு, இலக்கிய பொழில் விருதினை, பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் தங்கமணி, பேராசிரியர் உமா பாரதி வழங்கி அவரை கவுரவித்தனர். நிகழ்ச்சியில், இலங்கை வவுனியா பல்கலைக்கழக ஹரிஹர சக்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ