கால்நடை கண்காட்சி
அரியாங்குப்பம்: அரியாங்குப்பத்தில் நடந்த, கால்நடை கண்காட்சியில், சிறந்த முறையில் கால்நடைகளை பராமரித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சார்பில், கால்நடை கண்காட்சி நடந்தது. அரியாங்குப்பம் கால்நடை மருத்துவமனையில் நடந்த கண்காட்சிக்கு துறை இயக்குநர் லதாமங்கேஷ்கர் தலைமை தாங்கினார். இணை இயக்குநர் காந்திமதி முன்னிலை வகித்தார். கண்காட்சியில், கால்நடை வளர்ப்போர் தங்களின் மாடுகள், கோழிகளுடன் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக பாஸ்கர் எம்.எல்.ஏ., பங்கேற்று சிறந்த முறையில் கால்நடைகளை பராமரித்தவர்களுக்கு பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில், அரியாங்குப்பம் கால்நடை மருத்துவமனை மருத்துவர் மரியா, கால்நடை நலத்துறை ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.