உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

புதுச்சேரி: லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.முத்தியால்பேட்டை உதவி சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மதியம் முத்தியால்பேட்டை மார்க்கெட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு கோட்டக்குப்பம் பழைய சென்னை ரோட்டைச் சேர்ந்த ரபிக் 53, மூன்று இலக்க எண் லாட்டரி சீட்டு விற்றது தெரியவந்தது.அதையடுத்து லாட்டரி சீட்டு விற்பனைக்கு பயன்படுத்திய செல்போன், துண்டு பேப்பர்கள், ரூ. 1,700 பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து ரபிக்கை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !