உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

திருபுவனை,: திருபுவனை அருகே 3ம் நம்பர் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர். திருபுவனை அடுத்த கே.ஆண்டியார்பாளையம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட 3ம் நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இது குறித்து திருபுனை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் கே.ஆண்டியார்பாளையம் பகுதியில் ஆய்வு செய்தனர். அங்கு லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபர் போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்றார். அவரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.அவர் ஆண்டியார்பாளையத்தை சேர்ந்த ராஜி (எ) பெரியண்ணசாமி 35; என்பது தெரியவந்தது. அவரை போலீசார், கைது செய்து, அவரிடம் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கேரளா உள்ளிட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள், இரண்டு மொபைல் போன்கள் மற்றும் 7 ஆயிரத்து 549 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.மேலும், விசாரணையில், லாட்டரி வியாபாரியான, ஆண்டியார்பாளையத்தை சேர்ந்த குமார் என்பவர் மூலம் லாட்டரி சீட்டுகள் வாங்கி விற்பனை செய்தது தெரியவந்தது. பெரியண்ணசாமியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவான வியாபாரி குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

arasiyal kelvi tv
ஜூன் 02, 2025 11:12

அரசு மதுவை ஒழித்து விட்டு லாட்டாரியை அரசு எடுத்து நடத்தலாம் முதியவர் மற்றும் மாற்று திறனாளிகள் மற்றும் அநேக நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்


arasiyal kelvi tv
ஜூன் 02, 2025 11:09

உடலுக்கு கேடு தரும் மதுப்பானத்தை அரசு விற்கும் ஏனென்றால் மது விற்பத்திலும் அரசுக்கு வருமானம் மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுப்பவர்களை பிடித்தாலும் அரசுக்கு வருமானம் மது குடித்து விட்டு மது போதையில் பொதுவெளியில் சண்டை போட்டாலும் காவல்துறை மூலமாக வழக்கு போட்டு அரசுக்கு வருமானம் அதனால் அரசு மதுப்பான கடைக்கு ஆதரவு கரம் நீட்டுது லாட்டாரியில் ஒரேயொரு வருமானம் மட்டும் கிடைப்பதால் அரசு லாட்டாரியை தடை செய்துள்ளது ஆனால் ஒன்றை சொல்கிறேன் லாட்டாரியை அரசே ஏற்று நடத்தினால் முதியவர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என அநேக நபர்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கும் அரசு சொல்கிறது லாட்டாரியால் பல குடும்பங்கள் பாதிக்கப்படுவதாக நான் கேட்கிறேன் மதுவால் எல்லா குடும்பமும் வாழ்கிறதா?


Chandrasekaran
ஜூன் 02, 2025 09:29

லாட்டரியை ஒழிப்பதும் ஊழலை ஒழிப்பதும் ஒரு சடங்கு. செய்தித்ததாள்கள் லாட்டரி குறித்து தகவல் கொடுப்பது போல் ஊழல் குறித்தும் வெளிப்படையாக தெரிவிக்குமா. பின்புலம் இல்லாத சிறு வியாபாரம் மாட்டிக்கொள்கிறது. ஒவ்வொரு ஒப்பந்தத்ததிலும் கமிஷன் என்ற வகையில் ஊழல் நடப்பதை ஆதாரபூர்வமாகத் தெரிவிக்க வவேண்டும். அப்படிச் செய்தால் பாராட்டலாம். பொதுமக்கள் இழப்புக்கும் தனிநபர் தன்னடக்கமில்லா இழப்புக்கும் வேறுபாடுள்ளது.


Chitra Chitramuthu
ஜூன் 02, 2025 12:14

அண்ணா சூப்பர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை