ஆடம்பர தேர்பவனி
புதுச்சேரி: அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் ஆடம்பர தேர்பவனி நடந்தது. அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தின், 335ம் ஆண்டு பெருவிழா, கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, ஆலயத்தில் தினமும் காலை சிறப்பு திருப்பலி, மாலை தேர்பவனி நடந்து வந்தது. முக்கிய நிகழ்வான, ஆண்டு பெருவிழா நேற்று நடந்தது. காலை 8:00 மணிக்கு பெருவிழா திருப்பலி, மாலை, 5:30 மணிக்கு ஆடம்பர தேர்பவனி நடந்தது.