உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சொகுசு கப்பல் இன்று வருகை புதுச்சேரியில் படகுகள் இயக்க தடை

சொகுசு கப்பல் இன்று வருகை புதுச்சேரியில் படகுகள் இயக்க தடை

புதுச்சேரி: புதுச்சேரிக்கு சொகுசு கப்பல் வருவதையொட்டி, இன்று படகுகள் இயக்குவதற்கு, கடலோர போலீசார் தடை விதித்துள்ளனர்.விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை வழியாக 1,400 பேர் பயணம் செய்யக்கூடிய, பல்வேறு வசதிகள் கொண்ட, சுற்றுலா சொசுகு கப்பல் புதுச்சேரிக்கு இன்று வருகிறது. இந்த கப்பலில் வருவர்களை படகுகள் மூலம், உப்பளம் புதிய துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு, அங்கிருந்து பஸ்கள் மூலம் புதுச்சேரியை சுற்றிப்பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சொகுசு கப்பல் வந்து செல்லும் நேரத்தில், படகுகளை இயக்குவதற்கு, கடலோர போலீசார் தடை விதித்துள்ளனர்.இதுகுறித்து, கடலோர போலீஸ் நிலையத்தின் அதிகாரி, கூறுகையில், 'புதுச்சேரி சுற்றுலாத்துறை அறிமுகப்படுத்தும், சொகுசு கப்பல், பயணம் புதிய துறைமுகம் பகுதியில் இயக்கப்பட உள்ளது. அதனால், இன்று காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரையிலும், மாலை 5:00 மணி முதல் 6:00 மணி வரையிலும், சுற்றுலா படகுகள், ஸ்கூபா டைவிங் படகுகள், பாய்மர படகுகளை இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது' என்றார்.இதனிடையே, சொகுசு கப்பல் வருகையால், படகுகள் இயக்குவதற்கு தடை விதித்ததை கண்டித்து, புதுச்சேரி அ.தி.மு.க., சார்பில், போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ