உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காஸ் விலை உயர்வை கண்டித்து மா.கம்யூ., போராட்டம்

காஸ் விலை உயர்வை கண்டித்து மா.கம்யூ., போராட்டம்

புதுச்சேரி : மத்திய அரசு காஸ் விலையை உயர்த்தியதை கண்டித்து, மா. கம்யூ., சார்பில், நுாதன போராட்டம் நடந்தது.மத்திய அரசு காஸ் விலையை 50 ரூபாயை உயர்த்தியுள்ளது. அதனை திரும்ப பெற வலியுறுத்தி, மா. கம்யூ., சார்பில், நேற்று காமராஜர் சிலை அருகே பிரசார இயக்கம் நடந்தது. நகர கமிட்டி தலைவர் ஜோதிபாசு தலைமை தாங்கினார். செயலாளர் ராமச்சந்திரன் கண்டன இயக்கத்தை துவக்கி வைத்தார். செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம், சீனுவாசன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.முன்னதாக, காஸ் சிலிண்டரை தலைமையில் துாக்கி கொண்டு, காந்தி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி வழியாக ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை