உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மத்திய அரசை கண்டித்து மா.கம்யூ., பிரசார இயக்கம்

மத்திய அரசை கண்டித்து மா.கம்யூ., பிரசார இயக்கம்

புதுச்சேரி: புதுச்சேரியில் மா.கம்யூ., கட்சி சார்பில், மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து பிரசார இயக்கம் நடந்தது.நகர செயலாளர் ஜோதிபாசு தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். ராஜா தியேட்டர் சந்திப்பில் துவங்கிய பிரசார இயக்கம் நேரு வீதி, காந்தி வீதி வழியாக சென்று முத்து மாரியம்மன் கோவில் அருகே முடிவடைந்தது. அங்கு, மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில், மூத்த தலைவர் முருகன், மாநில குழு உறுப்பினர் சரவணன், சி.ஐ.டி.யு., பொதுசெயலாளர் சீனிவாசன், துணை தலைவர்கள் மதிவாணன், கலியமூர்த்தி ஆகியோர் பேசினர்.அதில், மத்திய அரசு அறிவித்த சென்னை - புதுச்சேரி - கடலுார் இடையேயான ரயில் பாதை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ