சிறுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பி மிரட்டிய மதுரை யுடியூபர் மகன் கைது
புதுச்சேரி:புதுச்சேரியை சேர்ந்த பிளஸ் 1 பயிலும் சிறுமி, சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வருகிறார். இவருடன் இன்ஸ்டாகிராம் வாயிலாக அறிமுகமான நபர், சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.பின்பு, ஆபாச வீடியோக்கள் மற்றும் அவரது அந்தரங்க வீடியோக்களை அனுப்பி உள்ளார். சிறுமியையும் நிர்வாணமாக வீடியோவில் தோன்றுமாறு மிரட்டி உள்ளார். இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் போலீசில் புகார் அளித்தார்.சைபர் கிரைம் போலீஸ் விசாரணையில், சிறுமியை மிரட்டியது மதுரையைச் சேர்ந்த யு டியூபர் சிக்கா - சுமி தம்பதியின் மகன் அஷ்ரப் அலி, 24, என தெரிய வந்தது. யு டியூபர் ரவுடிபேபி திருச்சி சூர்யா, அஷ்ரப் அலியின் உறவினர் ஆவார்.இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி தலைமையில் தனிப்படை போலீசார், மதுரையில் பதுங்கியிருந்த அஷ்ரப் அலியை கைது செய்து புதுச்சேரி கொண்டு வந்தனர்.அஷ்ரப் அலியின் மொபைல்போனில் ஆய்வு செய்ததில், அவர் பல்வேறு பெண்களுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி தொந்தரவு செய்தது தெரிய வந்தது.சிறுமியின் தாய் புகாரில், ரவுடிபேபி சூர்யா, சிக்கா, சுமி ஆகியோரும் சிறுமிக்கு மிரட்டல் விடுத்ததாக கூறி இருந்தார். மூவரையும் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.