மேலும் செய்திகள்
சாரதாம்பாள் கோவிலில் காயத்திரி ஹோமம்
07-Oct-2024
புதுச்சேரி: சாரதாம்பாள் கோவில் நவராத்திரி சிறப்பு பூஜையில் நேற்று மகா ருத்ர ஹோமம் நடந்தது.புதுச்சேரி எல்லப்பிள்ளைச்சாவடி நுாறடிச்சாலை சிருங்கேரி சிவகங்கா மடம், சாரதாம்பாள் கோவிலில் பொன்விழா ஆண்டு நவராத்திரி விழா ஹோமங்கள் கடந்த 3ம் தேதி துவங்கியது.அதைத் தொடர்ந்து சூக்த ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், தன்வந்திரி, ஆஞ்சநேய ஹோமம், துர்கா சூக்த ஹோமம், காயத்திரி ஹோமங்கள் நடந்தது.நேற்று காலை மகா ருத்ர ஹோமம், சுயம்வரா பார்வதி ஹோமம், கந்தர்வ ராஜா ஹோமம் நடந்தது. இன்று (8ம் தேதி சுப்ர மண்ய ஷடாக்ஷரி ஹோமம், நவக்கிரக மிருத்யுஞ்ஜய ஹோமம், 9ம் தேதி ஹயக்ரீவ மற்றும் மகா சுதர்சன ஹோமம், 10ம் தேதி அதிஷ்டானத் தில் ஆராதனை, 11ம் தேதி மகா சண்டி ஹோமம் நடக்கிறது.விழாவையொட்டி தினசரி நடந்து வரும் இசை, பரத கலை நிகழ்ச்சியில் நேற்று மாதா அமிர்தானந்தமயி சேவா சமிதியின் பஜன் மற்றம் திரிவேணி கலாகேந்திராவின் பரதம் நிகழ்ச்சி நடந்தது.
07-Oct-2024