உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாஜி அமைச்சருக்கு கொலை மிரட்டல்

மாஜி அமைச்சருக்கு கொலை மிரட்டல்

புதுச்சேரி: முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரத்திற்கு ஸ்பீட் போஸ்ட் மூலம் கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கருவடிக்குப்பம், மகாவீர் நகரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரத்திற்கு நேற்று முன்தினம் ஸ்பீட் போஸ்ட் மூலமாக ஒரு கடிதம் வந்தது. அதில், புதுச்சேரி, சக்தி நகர், 3வது குறுக்கு தெருவைச் சேர்ந்த கதிர் என்பவர் அனுப்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்து. கடிதத்தை முன்னாள் அமைச்சர் படித்துப் பார்த்தபோது, அதில் கடுமையான அவதுாறு மற்றும் நாகரிகமற்ற வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன. மேலும், அக்கடிதத்தில் ‘இனிமேல் நாங்க தான்டா.. காலாப்பட்டு தொகுதி கவுண்டர் தொகுதி டா, மோதினா சாவு தாண்டா, சாசன் கம்பெனி எங்க கவுண்டருக்கு தான், இனி நாங்க தான் எனத் நேரடி கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம் அளித்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ