மேலும் செய்திகள்
ஏனாம் மக்கள் விழா: அமைச்சர் ஆலோசனை
11-Oct-2026
புதுச்சேரி: புயலால் பாதிக்கப்பட்ட ஏனாம் பகுதிக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கோரிக்கை விடுத்துள்ளார். அவர், கவர்னர் மற்றும் முதல்வரிடம் அளித்துள்ள மனு: அரசின் நடவடிக்கைகள் காரணமாக ஏனாம் மக்கள் புயல் பாதிப்பில் இருந்து உயிரிழப்புகள் இன்றி மீண்டுள்ளனர். கடந்த 27, 28 தேதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், 28ம் தேதி நள்ளிரவில் நகரின் 50 சதவீத பகுதிகளுக்கு மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டது. நேற்று கனகலப்பேட்டை அதன் அருகில் உள்ள பகுதிகளில் மின்சாரம் முழுமையா வழங்கும் பணி நடந்தது. ஏனாமில் உள்ள 16,405 ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பாகுபாடின்றி நிவாரணம் வழங்க வேண்டும். சாவித்திரி நகர், குயிரெம்பேட்டை, குரு கிருஷ்ணாபுரம் பகுதிகளில் வெள்ள நீர் மற்றும் கடல் நீர் உட்புகுந்துள்ளது. அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும். ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்பட்ட 300 குடும்பங்களையும் நிவாரணப்ப பட்டியலில் சேர்க்க வேண்டும். சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீட்டை இரட்டிப்பாக வழங்க வேண்டும். கால்நடைகளுக்கு குறைந்தபட்சம் 30 நாட்களுக்கு தீவனம் அல்லது பண இழப்பீடு வழங்க வேண்டும். ஏனாமில் மழை, காற்று வீசுவதால், மின்கம்பங்கள், மின்கம்பிகள் சேதமடைவது தொடர்கிறது. எனவே தற்போதுள்ள மின் கம்பங்களை மாற்ற வேண்டும். சேதமடைந்த அரசு கட்டடங்களை சீரமைக்க வேண்டும். சேதமடைந்த படகுகளை பழுதுபார்க்கவும், புதிய படகுகள் வாங்கவும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
11-Oct-2026