உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஜெனரேட்டர் திருட முயன்றவர் கைது

ஜெனரேட்டர் திருட முயன்றவர் கைது

காரைக்கால்; காரைக்காலில் ஜெனரேட்டர் திருட முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.காரைக்கால் சப் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது, தேய்தா வீதி சந்திப்பில், ஒரு வீட்டினோரம் வைத்திருந்த ஜெனரேட்டரை திருட முயன்ற நபரை, போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில், அவர், சீர்காழி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த பால்ராஜ், 55; என்பதும், திருட முயன்றதும் தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து, பால்ராஜை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை