பெண்களை கேலி செய்தவர் கைது
புதுச்சேரி: பெண்களை சினிமா பாடல் பாடி கேலி செய்தவரை போலீசார் கைது செய்தனர். உருளையன்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். புதிய பஸ் நிலையத்தில் ஒருவர் பெண்களை சினிமா பாடல்களை பாடி கேலி செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். போலீசார் அவரை மடக்கி பிடித்து, விசாரித்தனர். அவர், விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசத்தை சேர்ந்த குமார் 55, என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.