முன்விரோதம் காரணமாக தீ வைத்த நபருக்கு வலை
காரைக்கால்; காரைக்காலில் முன்விரோதம் காரணமாக பெட்ரோலில் துணியை நனைத்து தீ வைத்து வீட்டில் வீசிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். காரைக்கால், இந்திரா நகரை சேர்ந்தவர் கண்ணன்; கம்பிபிட்டர். இவரது வீட்டின் பின் பக்கம் வசிப்பவர் ஜோசப், 67. இருவருக்கும் இடையே ஏற்கனவே ஏற்பட்ட தகராறில் ஜோசப், கண்ணன் வீட்டை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோலுடன் வந்த ஜோசப், துணியை பெட்ரோல் ஊற்றி நனைத்து தீ வைத்து, கண்ணன் வீட்டில் வீசினார். அவரது வீட்டு வாசலில் நிறுத்திருந்த பைக் மீது விழுந்தால் தீப்பற்றி எரிந்தது. அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்தனர். இதுக்குறித்து கண்ணன் அளித்த புகாரின் பேரில், ஜோசப் மீது நகர காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.