சிமென்ட் கடையில் திருடிய நபர் கைது
காரைக்கால் ':காரைக்கால் நிரவி கிளாஸ் தெருவை சேர்ந்தவர் பொன்னுசாமி. அப்பகுதியில் சிமென்ட் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் கன மழையால் கடை வாசலில் தேங்கிய மழை நீரை பொன்னுசாமி அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது மழைக்கு கடையில் ஒதுங்கி நின்றி நிரவி லத்திப் நகரை சேர்ந்த அஜிஜூல் நவித், 35, என்பவர், கல்லா பெட்டியில் இருந்த 9,490 பணம் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மொபைல் போனை திருடிச் சென்றார். நிரவி காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் குமரன் வழக்குப் பதிந்து, அஜிஜூல் நவித்தை கைது செய்தார்.