உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கத்தியை காட்டி மிரட்டியவர் கைது

கத்தியை காட்டி மிரட்டியவர் கைது

புதுச்சேரி: பாக்கமுடையான்பேட்டையில் கத்தியை காட்டி பொது மக்களை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். டி நகர் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையிலான போலீசார் நேற்று (நவ.,9) காலை பாக்கமுடையான்பேட் பகுதியில் ரோந்து சென்றனர். வன்னியர் வீதி தனியார் பார் அருகே கத்தியை காட்டி பொது மக்களை மிரட்டிய செயின்ட்பால்பேட் பாலமுருகன் மகன் சுரேஷ்,29, என்பவரை போலீசார் கைது செய்து, கத்தியை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !