கத்தியை காட்டி மிரட்டியவர் கைது
புதுச்சேரி: குமரகுருப்பள்ளம், 45 அடி சாலையில் நேற்று (நவ.,13) அவ்வழியாக செல்லும் பொதுமக்களை வாலிபர் ஒருவர் கத்தி காட்டி மிரட்டுவதாக பெரியக்கடை போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அங்கு கத்தியுடன் பொது மக்களை மிரட்டிய நபரை பிடித்து விசாரித்தனர். அவர், காமராஜர் நகர், திருவள்ளுவர் வீதியை சேர்ந்த மணிகண்டன், 34, என்பது தெரியவந்தது. அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.