மேலும் செய்திகள்
உண்டியலை உடைத்து பணம் திருட்டு
12-Apr-2025
அரியாங்குப்பம்: முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில் உண்டியல் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.கடலுார் சாலை, முருங்கப்பாக்கத்தில், பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவிலில் சமிபத்தில் பங்குனி உத்திர திருவிழா நடந்தது.நேற்று முன்தினம் காலை 6:00 மணியவில் கோவில் ஊழியர்கள், கோவிலை திறந்து உள்ளே சென்றனர். அப்போது அம்மன் சன்னிதி எதிரே இருந்த உண்டியல் பூட்டு, உடைக்கப்பட்டு, அதிலிருந்த காணிக்கைப் பணம் திருடு போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் வெளி பகுதியில் நாககன்னி அம்மன் சன்னிதி அருகே இருந்த உண்டியலில் இருந்த ஒரு பூட்டு உடைத்தும், மற்றோரு பூட்டு உடைக்க முடியாமல் போனதால், அதில் இருந்த பணம் தப்பியது. உடைக்கப்பட்ட உண்டியலில் இருந்து 20 ஆயிரத்திற்கு மேல் பணம் திருடுபோயிருக்காலம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். கோவில் சிறப்பு அதிகாரி மணிமாறன் கொடுத்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, கோவிலில் இருக்கும் சி.சி.டி.வி., கேமராவை ஆய்வு செய்து, மர்ம நபரை தேடிவருகின்றனர்.
12-Apr-2025