உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / லாரி சக்கரம் ஏறி ஆண் நபர் பலி

லாரி சக்கரம் ஏறி ஆண் நபர் பலி

புதுச்சேரி: புதுச்சேரி குமாரபாளையம் விநாயகர் கோவில் அருகே வாலிபால் மைதானம் உள்ளது. அங்கு, அதே பகுதியைச் சேர்ந்த அறிவழகன், 38; என்பவர் லா ரியை நிறுத்தி இருந்தார். நேற்று முன்தினம் மதியம் அந்த லாரியை ரிவர்ஸ் எடுத்துள்ளார். அப்போது மைதானத்தில் படுத்திருந்த 55 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் மீது லாரியின் சக்கரம் ஏறியது. இதில் அவர் தலை நசுங்கி அதே இடத்தில் இறந்தார். இறந்தவர் குறித்து விபரம் தெரியவில்லை. வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !