படியில் தவறி விழுந்தவர் பலி
அரியாங்குப்பம்: வீட்டு படியில் தவறி விழுந்து காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.அரியாங்குப்பம், டோல்கேட் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி, 53; இவர் உடல்நிலை சரியில்லாததால், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். கடந்த 5ம் தேதி வீட்டு படி கட்டில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தார். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.