உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / படிக்கட்டில் தவறி விழுந்தவர் இறப்பு

படிக்கட்டில் தவறி விழுந்தவர் இறப்பு

புதுச்சேரி: வீட்டு படிக்கட்டில் தவறி விழுந்த கூலித்தொழிலாளி பரிதாபமாக இறந்தார். உறுவையாறு காலனியைச் சேர்ந்தவர் புஷ்பராஜ், 40; தனியார் பெட்ரோல் பங் ஊழியர். குடிப்பழக்கம் உள்ள இவர் குடித்துவிட்டு வீட்டிற்கு வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த 23ம் தேதி இரவு மது அருந்து விட்டு வீட்டிற்கு வந்த புஷ்பராஜ் வீட்டு படிக்கட்டில் ஏறும் போது தவறி கீழே விழுந்து சுயநினைவு இல்லாமல் இருந்தார். அவரை உறவினர்கள் மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த புஷ்பராஜ் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார். புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ