மேலும் செய்திகள்
ரேஷன் அரிசி கடத்தியவருக்கு ‘2 ஆண்டு’
22-Oct-2026
புதுச்சேரி: கிருமாம்பாக்கம் அருகே டிரைவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், குற்றவாளிக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கிருமாம்பாக்கம் அடுத்த கன்னியக்கோவில் கிராமத்தில் கடந்த 2017ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் தேதி, டிரைவர் ராஜா என்பவரை, அதே பகுதியை சேர்ந்த தேவநாதன், 40, என்பவர் ஆபாசமாக திட்டி, கட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து, ராஜா அளித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் மீதான விசாரணை, புதுச்சேரி ஏழாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி வினோத் குற்றம் சாட்டப்பட்ட தேவநாதனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட ராஜாவுக்கு, இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில், வழக்கறிஞர் தேவேந்திரன் ஆஜரானார்.
22-Oct-2026