உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குடிபோதை தகராறில் ஒருவர் கொலை: காரைக்காலில் பரபரப்பு

குடிபோதை தகராறில் ஒருவர் கொலை: காரைக்காலில் பரபரப்பு

காரைக்கால்: காரைக்காலில் குடிபோதையில் ஏற்பட்டத தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். காரைக்கால் திருநள்ளாறு அத்திப்படுகை கீழத்தெருவை சேர்ந்த சந்திரசேகர் மகன் செந்தில், 45; மற்றும் புதுத்துறை வடக்கு தெருவை சேர்ந்த மனோகர், 42; இருவரும் நண்பர்கள் . நேற்று புதுத்துறை தேசிய நெடுஞ்சாலை அருகில் செந்தில், மனோகர் மற்றும் சிலருடன் மது அருந்தியுள்ளனர். இதில் ஏற்பட்ட தகராறில் செந்தில் பாட்டிலால் தலையில் தாக்கியதில் அதே இடத்தில் இறந்தார். மேலும் மனோகர் பலத்த காயத்துடன் சுயநினைவின்றி கிடந்த அவரை அருகில் இருந்தவர்கள் செந்திலை மீட்டு அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்த நகர போலீசார் சம்பவ செந்திலின் உடலை கைப்பற்றி, யார் கொலை செய்தது எதற்காக கொலை நடந்தது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் படுகாயம் அடைந்த மனோகரின் போதை தெளித்த பின்னர் அவரிடம் விசாரித்தால் மட்டுமே நடந்த சம்பவங்களின் விவரங்கள் தெரியவரும் எனத் தெரிகிறது. மேலும் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ