உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முதியவரை செங்கல்லால் தாக்கிய நபர் கைது

முதியவரை செங்கல்லால் தாக்கிய நபர் கைது

காரைக்கால்: காரைக்காலில் முதியவரை செங்கல்லால் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். காரைக்கால், நிரவி அந்தோணியார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுப்ரமணியன், 65. இவர், நேற்று முன்தினம் தனது வீட்டின் முன் நின்றிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ், 30, என்பவருடன் முன்விரோத காரணமாக வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ரமேஷ், சுப்ரமணியனை ஆபாசமாக திட்டி, செங்கல்லால் தாக்கினார். காயமடைந்த சுப்ரமணியன் அரசு மருந்துவமனையில் சிகிச்சை பெற்றார். புகாரின் பேரில், நிரவி போலீசார் வழக்குப் பதிந்து, ரமேைஷ கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி