உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தேங்காய் பறித்ததை தட்டிக் கேட்டவருக்கு வெட்டு : வாலிபருக்கு 3 ஆண்டு சிறை

தேங்காய் பறித்ததை தட்டிக் கேட்டவருக்கு வெட்டு : வாலிபருக்கு 3 ஆண்டு சிறை

புதுச்சேரி: தேங்காய் பறித்ததை தட்டிக் கேட்ட உரிமையாளரை, கத்தியால் வெட்டிய வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கோர்ட் தீர்ப்பளித்தது. புதுச்சேரி, வீராம்பட்டினத்தை சேர்ந்தவர் செல்வன் மகன் விஜயன் (எ) தெரி விஜயன், 30. இவர், கடந்த 2014ம் ஆண்டு, மே மாதம் 26ம் தேதி, அதே பகுதியில் உள்ள குப்புசாமி என்பவரது தொன்னந்தோப்பில், தேங்காய் பறித்தார். அனுமதியில்லாமல் தேங்காய் எப்படி பறிக்கலாம் என, குப்புசாமி கேட்டார். இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த விஜயன், கத்தியால், குப்புசாமியின் கையில் வெட்டினார். இதுகுறித்து, புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் 506 (11) பிரிவின் கீழ் வழக்கு பதிந்து, விஜயனை கைது செய்து, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு, புதுச்சேரி கோர்ட்டில் 3ல், நடந்து வந்தது. அரசு தரப்பில், வழக்கறிஞர் ஹரிகரன் ஆஜரானார். இவ்வழக்கை, விசாரித்த நீதிபதி நர்மதா, விஜயனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் விதித்து, நேற்று தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ