உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாலிபரை கத்தியால் குத்தியவர்களுக்கு வலை

வாலிபரை கத்தியால் குத்தியவர்களுக்கு வலை

புதுச்சேரி: முன்விரோதம் காரணமாக வாலிபரை கத்தியால் குத்தி, கொலை மிரட்டல் விடுத்தவர்களை போலீசார் தேடிவருகின்றனர். புதுச்சேரி நேரு நகரில், பாட்டி வீட்டில் தங்கியிருந்தவர் ஹரி என்கிற பிரித்திவ்ராஜ், 24, இவரது தெரு வழியாக, கோவிந்தசாலையை சேர்ந்த சந்துரு, தென்னஞ்சாலையை சேர்ந்த விஜய் ஆகிய இருவரும் ் பைக்கில் வேகமாக சென்றது தொடர்பாக, ஏற்கனவே முன்விரோதம் இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஹரி வீட்டில் இருந்த போது, சந்துரு, விஜய் ஆகிய இருவரும் சேர்ந்து தகராறு செய்தனர். அதில், ஆத்திரமடைந்த, இருவரும் சேர்ந்து, ஹரியை கத்தியால் குத்தி, கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்த, ஹரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து, சந்துரு உட்பட இருவரையும் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ