உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மணவெளி பா.ஜ., வேட்பாளர் செல்வம் நோணாங்குப்பத்தில் ஓட்டு சேகரிப்பு

 மணவெளி பா.ஜ., வேட்பாளர் செல்வம் நோணாங்குப்பத்தில் ஓட்டு சேகரிப்பு

புதுச்சேரி: மணவெளி தொகுதி பா.ஜ., வேட்பாளர் செல்வம் தாமரை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்து வருகிறார். நேற்று நோணாங்குப்பம் பகுதிகளில் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார். அங்கு பா.ஜ.,வேட்பாளர் செல்வம் பேசுகையில், 'நோணாங்குப்பம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, புதிய சமுதாய நலக்கூடம் கட்டி தரப்படும், நோணாங்குப்பம் ஆற்றங்கரை பகுதி வெள்ளத்தால் பாதிக்காமல் இருக்கும் வகையில் வெள்ள தடுப்பு சுவர் அமைக்கப்படும் என, வாக்குறுதி அளித்தார். அரசு திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் தொடர்ந்து கிடைத்திட ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் 2-வது வரிசையில் உள்ள தாமரை சின்னத்தில் ஓட்டு போட்டு, தன்னை வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொண்டார். தொடர்ந்து இத்தொகுதியில் அவர் கொண்டு வந்த வளர்ச்சி பணிகள் எடுத்துக்கூறி ஓட்டு சேகரித்தார். பா.ஜ., - என்.ஆர்.காங்., - அ.தி.மு.க., - பா.ம.க., கட்சி உள்ளிட்ட கூட்டணி நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை