உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாரியம்மன் கோவிலில் மண்டலாபிஷேகம் பூர்த்தி

மாரியம்மன் கோவிலில் மண்டலாபிஷேகம் பூர்த்தி

புதுச்சேரி : புதுசாரம், கெங்கைமுத்து மாரியம்மன் கோயிலில், மண்டலாபிஷேகம் பூர்த்தி உற்சவம் வரும் 23ம் தேதி நடக்கிறது. புதுச்சேரி, புதுசாரத்தில் கெங்கைமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் புனரமைக்கப்பட்டு, ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிேஷகம் கடந்த ஜூன் 5ம் தேதி நடந்தது. தொடர்ந்து, 6ம் தேதி முதல் மண்டல அபிேஷகம் துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில், மண்டல அபிேஷகம் பூர்த்தி உற்சவம் வரும் 23ம் தேதி நடக்கிறது. அதனையொட்டி, அன்று காலை 9:00 மணிக்கு மண்டலபிஷேக பூர்த்தி மகா அபிஷேகம்-, கணபதி ஹோமம் நடக்கிறது. பின், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் உட்புறப்பட்டு, மஹா தீபாராதனை- நடக்கிறது. பகல் 12:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை