உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தேங்காய்த்திட்டில் மாங்ரோவ் காடு கால்வாய் ஆழப்படுத்தும் பணி

தேங்காய்த்திட்டில் மாங்ரோவ் காடு கால்வாய் ஆழப்படுத்தும் பணி

புதுச்சேரி : சுற்றுலாவை மேம்படுத்த தேங்காய்த்திட்டு மாங்ரோவ் காடு, கால்வாய் பகுதிகளை ஆழப்படுத்தும் பணி நடந்து வருகிறது.புதுச்சேரியில், சாகர்மாலா திட்டத்தின் மூலம், புதுச்சேரியில் கடல் வழி கப்பல் போக்குவரத்திற்கான பணிகள், துறைமுக பகுதியில் நடந்து வருகிறது. மத்திய அரசின் சுற்றுலாத்துறை மற்றும் புதுச்சேரி சுற்றுலாத்துறை மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை இணைந்து, சுற்றுலாவை மேம்படுத்த பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.புதுச்சேரி நெக்லஸ் திட்டத்தின் கீழ், புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்த, தேங்காய்த்திட்டு துறைமுகம் அருகில் உள்ள மாங்ரோவ் காடுகள் கால்வாய்களில், படகுகள் விடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கடல் நீர் மாங்ரோவ் காடுகள் இருக்கும் கால்வாய் பகுதியில் உள்ளே வருவதற்கு 2 மீட்டர் ஆழப்படுத்தும் பணி துவங்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை நீர்பாசன கோட்டம் ஏற்பாட்டில் மிதவை பொக்லைன் இயந்திரம் மூலம், பணிகள் நடந்து வருகிறது. கால்வாய்கள் ஆழப்படுத்திய பின், சுற்றுலா பயணிகளுக்காக படகு சவாரி துவங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை