மேலும் செய்திகள்
மண்வள மேம்பாடு பயிற்சி முகாம்
10-Jan-2026
திருக்கனுார்: காட்டேரிகுப்பம் உழவர் உதவியகம் சார்பில், மத்திய அரசின் தேசிய எண்ணெய் வித்துக்கள் மிஷன் திட்டத்தின் கீழ் மணிலா சாகுபடி குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம் சந்தை புதுகுப்பத்தில் நடந்தது. வேளாண் அலுவலர் வெங்கடாசலம் வரவேற்றார். மணக்குள விநாயகர் வேளாண் கல்லுாரி உதவி பேராசிரியர் செந்தில் குமார், மணிலா சாகுபடியில் தொழில்நுட்பம் மற்றும் மதிப்பிடுதல் குறித்தும், காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய நோயியல் நிபுணர் மணிமேகலை மணிலா சாகுபடி செய்வதில் ஏற்படும் நோய் மற்றும் உலர் உரம் வழங்கல் குறித்தும் விளக்கம் அளித்தனர். வேளாண் அறிவியல் நிலைய முன்னாள் முதல்வர் விஜயகுமார் மணிலா சாகுபடி செய்வதில் பூச்சி மேலாண்மை மற்றும் புதிய தொழில்நுட்பங்களை எடுத்துரைத்தார். பயிற்சி முகாமில் 70க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். உதவி வேளாண் அலுவலர் கண்ணாயிரம் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கிராம செயலாக்க அலுவலர்கள் ஏழுமலை, ஆதிநாராயணன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் குமரன் ஆகியோர் செய்திருந்தனர்.
10-Jan-2026