உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தியாகிகளுக்கு மனைப்பட்டா: முதல்வர் ரங்கசாமி உறுதி

தியாகிகளுக்கு மனைப்பட்டா: முதல்வர் ரங்கசாமி உறுதி

புதுச்சேரி : புதுச்சேரியில் தியாகிகளுக்கு விரைவில் மனைப்பட்டா வழங்கப்படும் என, முதல்வர் ரங்கசாமி தெரவித்தார்.குடியரசு தினத்தை முன்னிட்டு, செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில், கம்பன் கலையரங்கில் தியாகிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.இதில், முதல்வர் ரங்க சாமி பங்கேற்று பேசியதாவது;தியாகிகள் எண்ணியவாறு மாநிலத்தை முன்னேற்ற மத்திய அரசிடம் இருந்து அதிக நிதியை பெற்று, அதனை முறையாக செலவிட்டு, மாநிலத்தில் வளர்ச்சியை கண்டு கொண்டிருக்கிறோம்.உலக நாடுகள் வியந்து பாராட்டும் நிலையில் மக்களின் ஒத்துழைப்போடு நம்முடைய பொருளாதாரம் உயர்ந்து வருகிறது. நமக்கு தேவையான பொருட்களை நாமே உற்பத்தி செய்து கொள்ளும் நிலை உள்ளது. அதற்கு முக்கியமாக எல்லோருக்கும் நல்ல கல்வி கிடைக்க வேண்டும்.புதுச்சேரி அரசு ஏழை, எளிய மக்களின் பிள்ளைகள் எளிதாகவும், இலவசமாகவும் கல்வி கற்றும் நிலையை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் பல ஏழை, எளிய குடும்ப பிள்ளைகள் மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும் உயர்ந்த நிலையில் இருக்கின்றனர்.புதுச்சேரியில் இளைஞர்கள் ஐ.ஏ.எஸ்., விஞ்ஞானிகளாகவும், நிர்வா கத்தில் சிறந்தவர்களாகவும் வரவேண்டும். புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அரசு உதவி செய்து வருகிறது.பட்டியலின மக்களின் பிள்ளைகளுக்கு உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற எண்ணத்தோடு கல்விக்கான முழு தொகையையும் அரசு கொடுத்து வருகிறது. மாநிலத்தில் ஏழை, எளிய மக்களின் வறுமை நிலையை போக்கவும் அரசு முயற்சி எடுத்து வருகிறது.தியாகிகளுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.வருவாய்த்துறை மூலம் விரைவில் இடம் தேர்வு செய்யப்பட்டு தியாகிகளுக்கு மனைப்பட்டா கொடுக்கப்படும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்