மேலும் செய்திகள்
மனைவி தற்கொலை வழக்கில் கணவனுக்கு 5 ஆண்டுசிறை
31-Jan-2025
புதுச்சேரி: முன்னாள் அமைச்சரின் காஸ் ஏஜன்சியில் பணம் கையாடல் செய்ததாக, டெலிவரி பாய் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி, சொக்கநாதன்பேட்டை, வழுதாவூர் சாலையைச் சேர்ந்தவர் பெத்தபெருமாள். காங்., முன்னாள் அமைச்சர். மூலக்குளத்தில் இந்துஸ்தான் பெட்ரோலியம் காஸ் சிலிண்டர் விநியோகிக்கும் ஏஜன்சி நடத்தி வருகிறார்.இதில், வாழைக்குளம், அக்காசாமி மடம் வீதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் ரத்தினம், கடந்த 20 ஆண்டுகளாக டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார். கடந்த ஆண்டு பணியில் இருந்து நின்று விட்டார்.கடந்த ஆண்டு சிலிண்டர் டெலிவரி செய்த பணம் ரூ. 1 லட்சம் மற்றும்19 கிலோ எடை கொண்ட 27 சிலிண்டர், 5 கிலோ எடை கொண்ட 4 சிலிண்டர்களை ஒப்படைக்காமல் ஆனந்தகுமார் ரத்தினம் தலைமறைவாகி விட்டதாகவும், அவர், வர்த்தக காலி சிலிண்டர்களில், வீட்டு உபயோக சிலிண்டர்களின் எரி வாயுவை நிரப்பி சாலையோர கடைகளுக்கு விநியோகம் செய்ததாக பெத்தபெருமாள் ரெட்டியார்பாளையம் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். நீதிமன்ற பரிந்துரைப்படி அனந்த்குமார் ரத்தினம் மீது ரெட்டியார்பாளையம் போலீசார் மோசடி வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
31-Jan-2025