உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மார்கழி மகோற்சவம் பக்தி இசை நிகழ்ச்சி

மார்கழி மகோற்சவம் பக்தி இசை நிகழ்ச்சி

புதுச்சேரி : எல்லைப்பிள்ளைச்சாவடி சிருங்கேரி சிவகங்கா மடம் சாராதம்பாள் ஆலயத்தில் நடந்து வரும், 13ம் ஆண்டு மார்கழி மகோற்சவத்தின் 5ம் நாளான நேற்று பக்தி இசை நிகழ்ச்சி நடந்தது.புதுச்சேரி ராமானுஜர் பரபக்தி இயக்கம், மார்கழி மகோற்சவ கமிட்டி மற்றும் சாரதா கலாமந்திர் இசை நாட்டியப்பள்ளி சார்பில், 13ம் ஆண்டு மார்கழி மகோற்சவம் எல்லைப்பிள்ளைச்சாவடி சிருங்கேரி சிவகங்கா மடம், சாராதம்பாள் ஆலயத்தில் துவங்கி நடந்து வருகிறது.30 நாட்கள் நடக்கும் இந்த மகோற்சவத்தின் 5ம் நாளான நேற்று பக்த மீரா குழுவினரின் பக்தி இசை நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக திருப்பாவை, மாலை 6:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை விஷ்ணு, லட்சுமி, லலிதா சகஸ்ரநாமம் சேவித்தல் நடந்தது.வரும் 25ம் தேதி காலை 9:00 மணிக்கு திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி, 30ம் தேதி அனுமன் ஜெயந்தி விழா, ஏக தின லட்சார்ச்சனை நடக்கிறது. 31ம் தேதி பேராசிரியர் நல்லசிவம் பங்கு பெறும் மார்கழியும் மனங்குளிர் திருமுறை என்ற தலைப்பில் சொற்பொழி, அடுத்த மாதம் 10ம் தேதி வைகுண்ட ஏகாதசி சிறப்பு நிகழ்ச்சி, 11ம் தேதி மாலை 5:30 மணிக்கு ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ