உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருமண ஏக்கம் தொழிலாளி தற்கொலை

திருமண ஏக்கம் தொழிலாளி தற்கொலை

காரைக்கால்: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி திருக்கடையூர் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் மகன் பிரவீன்நாத், 24; கட்டட தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் தினம் மது அருந்தி வந்தார். காரைக்கால், திருவேட்டக்குடி கோவில் மேட்டில் உள்ள ரவி என்பவர் வீட்டில் பிரவீன்நாத் மற்றும் சிலர் தங்கி, பில்டிங் வேலை செய்து வந்தனர்.திருமணம் ஆகாத ஏக்கத்தில், பிரவீன்நாத் நேற்று முன்தினம் துாக்குபோட்டு தற்கொலை செய்துக் கொண்டார். புகாரின் பேரில், கோட்டுச்சேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !