தற்காப்பு கலை விழிப்புணர்வு
புதுச்சேரி : அவ்வை நகர் மகளிர் சங்கம் சார்பில் மகளிர்களுக்கான தற்காப்பு கலை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.அவ்வை நகர் மகளிர் சங்க தலைவி தீபா சுந்தர் வரவேற்றார். தலைமை காவலர் வீரமங்கை ஹேமமாலினி கலந்து கொண்டு தற்காப்பு கலை பற்றியும், இன்றைய சூழலில் பெண்கள் எப்படி வாழவேண்டும் என்பது குறித்து, பல்வேறு அனுபவங்களை எடுத்துரைத்தார்.இதில், மகளிர்கள் தங்களது சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர். தொடர்ந்து, தற்காப்பு கலை செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.ஏற்பாடுகளை பங்காரம்மாள், ஒருங்கிணைப்பாளர் உமா சேகர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர். துணைத் தலைவி பார்வதி தேவநாராயணன் நன்றி கூறினார்.