உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தற்காப்பு கலை பயிற்சி முகாம் நிறைவு 

தற்காப்பு கலை பயிற்சி முகாம் நிறைவு 

புதுச்சேரி: பரிக்கல்பட்டு அரசு உயர்நிலை பள்ளியில் மாணவிகளுக்கான தற்காப்பு கலை பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது.விழாவிற்கு, புதுச்சேரி மாநில தற்காப்பு கலை சங்க இணைச் செயலாளர் பாலச்சந்தர் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.அகில இந்திய கராத்தே சங்கத் தலைவர் வளவன் கலந்து கொண்டு, பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார். பட்டதாரி ஆசிரியர்கள் கார்த்தி கேயன், உடற்கல்வி ஆசிரியர் ஆண்ட னிராக் சத்யா, பாகூர் தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த செல்வம், பாகூர் கொம்யூ விளையாட்டு வீரர்கள் நல சங்க நிர்வாகி அய்யப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முகாமில், பயிற்சியா ளர் நீலவேணி, மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ